முல்லைத்தீவில் சகோதரனைப்போலவே தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

(விஜித்தா)
முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்  செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆரோக்கியநாதர் கபிலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர்  மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் 
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் சகோதரர் ஒருவரும்   இதே மரத்தில்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.