மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


லசந்த மற்றும் தாஜூடீன் கொலை வழக்குகளை துரிதமாக முடிக்க உத்தரவு!!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகள், கப்பம் பெற இளைஞர்கள் உட்பட 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை, மூதூர் எக்ஸன் பார்ம் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் 17 ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தேவையற்ற ரீதியில் தாமதமாக்கி வருவதாக சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

இதனால், இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர், திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிஷார ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.