அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!

அவுஸ்திரேலியா - டார்வின் பகுதியில்  துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

மேலும் இத் துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் அல்ல என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post