மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மைத்திரி பதவி விலகி பலமான தலைமைத்துவத்திற்கு இடமளிக்க வேண்டும்; ரொஷான் ரணசிங்க!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகி பலமான தலைமைத்துவத்தை மக்கள் விரைவாக தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பாரிய கருத்து வேறுபாடுகள் தற்போது காணப்படுகின்றமை ஒன்றும் புதிதல்ல, ஆரம்பத்தில் இருந்து இவ்விருவரும் அதிகார போட்டிக்கமைய முரன்பட்டுக் கொண்டமையின் விளைவாகவே தேசிய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

இவ்விருவரும் தங்களின் தனிப்பட்ட பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு மக்களையும், நாட்டின் எதிர்காலத்தையும் பகடையாயாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாது.

முஸ்லிம் இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக அரசியல் அழுத்தங்கள் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 

தற்போது முஸ்லிம் இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக எவ்வித வன்மங்களும் கட்டவிழ்த்து விடப்படவில்லை. மத போர்வையில் மதத்திற்கு அப்பாற்பட்டு நல்லிணக்கத்துடன் வாழ முற்படும் முஸ்லிம் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் முறையாக இடம்பெறுகின்றன என்பதை தெளிவாக புரிந்துக் கொள்வது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.