தெரிவுக் குழு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது பிணைமுறி மோசடியாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பேன்: மைத்திரி


(விஜித்தா)
உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத  தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யாவிட்டால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பலரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிவருமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியால் இன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை கடுமையாக தாக்கிப் பேசிய ஜனாதிபதி, தெரிவுக்குழுவை ரத்துச் செய்வதா? இல்லையா? என்று அமைச்சரவை இன்று முடிவு செய்ய வேண்டுமெனவும் அல்லது தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூடாதென்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டு அமைச்சரவையின் இடை நடுவே எழுந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post