மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


அடுத்த ஜனாதிபதி யார்? : தமிழ் பேசும் மக்களின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது

(விஜித்தா)


சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


"இவ்வருட இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானம் மிக்க ஒரு தேர்தலாக. அமையவுள்ளது .

இத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தீர்மானத்தை பொறுத்துதான் ஜனாதிபதி தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படும் என்ற நிலையே காணப்படுகின்றது.

இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் கலந்துரையாடினோம்" - என மேலும் ஹக்கீம் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.