நேரம் இருந்தால் வாசியுங்கள்--ஏனென்றால் சிலவேளை நீங்களும் இவ்வகைத் தேநீரை பருகக்கூடும்!!(சமூக ஆர்வலர் சச்சிதானந்தம் பழனிச்சாமி)

மதியம் தற்செயலாக ஒரு பத்திரிகைச் செய்தியையும்,அதில் குறிப்பிட்டிருந்த ஊரையும் பார்த்த பிறகு  அதைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. 
அந்த பத்திரிக்கை படமும்,பின்னூட்டமும் இங்கே உள்ளன. 

அதேவேளை சில வாரங்களுக்கு முன்பு காலி பிரதேசத்தில் தேயிலைத் தூளில் கலக்க வைத்திருந்த ஒரு ஆபத்தான சாயம் (ரசாயனம்) பற்றியும் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. 

ஆனாலும், முன்னரெல்லாம் அப்படி ரெடிமேட்  கெமிக்கல் ஒன்றுமேயில்லை. எல்லாம். இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்கள்தான் கலவைகளாகும். 

சரி..விசயத்துக்கு வருகிறேன்.

1980 ம் ஆண்டளவில் ராணுவத்தில் மருத்துவராகப் பணி புரிந்த எனது மைத்துனர்  ஒருவர், வவுனியா, பூவரசங்குளத்தில் கிராமத் தலைவராக இருந்த ஒரு நெருங்கிய  முஸ்லிம் நண்பரைப் பார்க்க போனபோது என்னையும் அழைத்துச் சென்றார். 
அந்த நாளில் அங்கே கிடைப்பதற்கு அரிதான மலைநாட்டுத் தேயிலைத் தூள் 2 கிலோவும், அவரது வீட்டில் செய்து கொடுத்த பலகாரப் பார்சலையும் எடுத்து வந்திருந்தார்.

நண்பர் வீட்டை அடைந்ததும், நண்பர் அங்கே இல்லாத நிலையில்  தேயிலையை அவரது மகளிடம்  கொடுக்க, தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில்   முக்காட்டாக போட்டுக்கொண்ட அந்த இளம் பெண் புன்முறுவல் பூக்க அதை வாங்கிக் கொண்டாள்.

அதற்கிடையில் செய்தி பறக்க உம்மாவும், வாப்பாவும், நானாவும் வந்துவிட்டார்கள். 

நாங்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருக்க...
"என்ன குடிக்கிறீர்கள்? டீயா,பிளேன் டீயா, இளநியா" என்று கேட்க எங்கள் தெரிவு பிளேன் டீயாக இருந்தது. 

மகள், முதலில்  நாங்கள் கொண்டு போன பலகாரம் சகிதம் அவர்களுடைய தொதலும் கொண்டு வந்து மேசையில் வைத்தாள்.
வரும்போதே வாயில் ஏதோ மென்றுகொண்டு "அங்கள், மாமிட பணியாரம் டேஸ்ட்டா இருக்கு" என்று சொல்லவும்..எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை!(விவஸ்தை கெட்ட வாலிப வயது) மைத்துனர் தர்மசங்கடத்தோடு நெளிந்தபோது, அவள் மீண்டும் சந்தேகத்தோடு.."அங்கள், இதுக்குப் பேர் அங்கே பணியாரந்தானே?  அந்த அண்ணன் சிரிக்கிறார்" என்று கூற அங்கள் "ஓம் மகள்" என்றவர்.. என்னைப் பார்த்து "என்ன இது? ஏதும் நினைக்கப் போகிறார்கள் ஐசே" என்று எனது  காதில் குசுகுசுத்தார்.

பின்னர் கிளாசில் டீ வந்தது செக்கச் செவேல் என்று சிவந்த டீ. வாயில் வைத்தவுடன் ஒரு மாதிரி மருந்து மனத்தோடு கசப்பு ருசி.குமட்டியது. பாதி குடித்துவிட்டு வைத்துவிட்டோம்.

"என்ன..பிளேன் டீ சரியில்லையா" என்று ஆன்டி கேட்கவே... நான்: "இது நாங்கள் கொண்டு வந்த டீயா"?
ஆன்டி: "இல்லை, இது எஸ்டேட் பக்கம் இருந்து எங்கட ஒரு முஸ்லிம் யாவாரி கொண்டு வாரார்" நான் : "அந்த டீயைக் கொஞ்சம் கொண்டு வாங்கள் பார்ப்பம்"
ஆன்டி நாங்கள் கொண்டுபோன டீ பக்கெட்டையும்,  உடைத்திருந்த  வியாபாரியின் டீ பக்கெட்டையும் கொண்டு வரும்போதே "நீங்கள் கொண்டு வந்த தேயிலை விலை கூட போல. யாவாரியின்ட தேயிலை விலை குறைவு" என்றாள்.

எங்கள் தேயிலை பக்கெட்டில் விலையைப் பார்த்திருப்பாள் போல! அந்த தேயிலைத் தூளை நாங்கள்  பார்த்துக்கொண்டிருக்கவே--அவள் "ஏன் இது சரியில்லையா? அவர் வேனில கொண்டு வாரார். ஊரில இருக்க ஆட்கள் எல்லாம் அந்த தேயிலையத்தான் வேண்டுறம். அவருக்கு நல்ல யாவாரம்" என்று உள்ளே போனவள் "அதில் பல ரகம் இருக்கு. இது கொஞ்சம் விலை கூட. இது கொக்கோ தேயிலை" என்று வேறொரு பாக்கெட்டை நீட்டினாள்.

எல்லாம் கலப்படம் என்று விளங்கிவிட்டது. அதன் பெயர் 
சூப்பர் குட் டீ !
அவர்களுக்கு நிலைமையை விளக்கினோம் ஆனாலும் அவர்கள் இலகுவில் நம்புவதாக இல்லை ஆமாம், முஸ்லிம் வியாபாரிக்கு அது ஹராமாகத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஹலாலும் இல்லை. அது 90 வீதம் அன்று ஒரு முஸ்லிம் கிராமம் என்றாலும்.... தனது இன/மத மக்கள் என்ற பேதம் வியாபாரத்துக்கு,அந்த முஸ்லிம்  வியாபாரிக்கு இல்லை. 

அதேசமயம் நாங்கள் கொண்டுபோன பலகாரமும் அந்த நல்ல முஸ்லிம் குடும்பத்துக்கு ஹலால் அல்லது ஹராமாகவோ இருக்கவில்லை. 
அது ஒரு பொற்காலம்! 

நாங்கள் கிளம்பும்போது தொதல் பார்சலைத் தந்தார்கள் கலப்பட டீயைப் பற்றி எச்சரித்துப் புறப்பட்டோம் கண்டிக்கு வந்துவிட்டோம் நாட்கள் ஓடிவிட்டன ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்த ஆண்கள்  இருவர் உடல் வலிக்கு மருந்து எடுக்க வந்தனர் சோதித்தபோது உடலெங்கும் கண்டல் காயம் இருந்தது. 

என்னவென்று கேட்க "ஐயா, தேயிலை சூப்பிங் எடுத்து விக்கிறோம்னு போலீஸ்ல புடிச்சிக்கிட்டு போய்  ராலாமிக அடிச்சுப்புட்டாய்ங்க" என்றார்கள் மருந்து கொடுத்து அனுப்பிவிட்டேன். 

சிலநாட்கள் செல்ல வவுனியா தேயிலை  நினைவு வந்து அந்த தேயிலை சூட்சுமங்களை அறிந்து கொள்ளும் ஆவலில் அவர்களை  அழைத்து விசாரிக்கவே... நீண்ட கெஞ்சலுக்குப் பிறகு ரகசியத்தை  அவிழ்த்து விட்டார்கள். 

"ஐயா, நாங்க மட்டும் இல்ல. எல்லா எஸ்டேட்டிலையும் இது நடக்குது. நாங்க சேகரிக்கிற சூப்பிங் தேயிலய கெலிஓயா துலுக்க யாவாரி ஒருத்தருக்கு குடுக்கிறோம். அங்கே வேலையும் செய்யிறோம். தோட்டத்த விட நல்ல சம்பளம் தாராரு" என்றார்கள். 

ஆமாம்,  இந்த சூப்பிங் தேயிலை என்றால் என்ன? 

தேயிலைத் தொழிற்சாலைகளில் தேயிலைத்  தூள் தயாரிப்பில் பல வகை உள்ளன அதையெல்லாம் விபரிப்பதை விடுவோம். இதில் கடைசியாக வரும் தேயிலையே சூப்பிங் டஸ்ட் என்று தொழிலாளருக்குக் கொடுக்கப்படுகிறது. அதிலும் கூட  கழிக்கபபடும் தேயிலைக் கழிவு/குச்சிகள் போன்ற உபயோகம் அற்ற பகுதியை தேயிலைத் தூருக்கு உரமாக போடுவார்கள். இதையே சில தொழிலாளர் சேர்த்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்பார்கள். இது சட்ட விரோதமானது.

சரி...இதை எப்படிதான் தயாரிக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவலில் அந்த தொழிலாளர்களை தாஜா பண்ணி கெலிஓயா போய் பார்க்க ஆசைப்பட்டேன். 
அதன்படி அவர்களது முஸ்லிம் முதலாளி இல்லாத ஒரு தருணம் பார்த்து என்னை கெலிஓயா கூட்டிப் போனார்கள்.

கெலிஓயாவில்...
அது ஒரு ஒதுக்குப்புறமான பகுதி; பெரிய வீடு.ஆங்காங்கே கழிவுத் தேயிலை மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கம்பளைப் பகுதி தோட்டத்துப் பெண்கள் சிலர்  தூசு போகாமல்  மூக்கில் துணியைக் கட்டிக்கொண்டு தூளாக்கப்பட்ட கழிவுக் குச்சிச் தேயிலையை சல்லடைகளால் சலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆமாம். ..எப்படி அது  தூளாக்கப்படுகிறது? கழிவுத் தேயிலையை கோணிச் சாக்குப் பையில் இட்டு பெரிய கம்புகளால் சிலர் அடியோ அடியென்று போட்டுத் தாக்குகிறார்கள் அதுவே பிறகு சலித்து வேறாக்கப்படுகிறது. 

*அந்த தூளை பெரிய பொலித்தீன் சீட்டில் பரப்புகிறார்கள்;
*அதில் கரைக்கப்பட்ட யூரியா தெளிக்கப்படுகிறது. 
*அதை அப்படியே சுருட்டி வைத்துவிடுகிறார்கள். 
*சில மணிநேரம் கழித்து திறந்தால் கறுப்பு நிறத்தில் தேயிலை தயார். 
இது ஒரு முறை!

*பரப்பப்பட்ட தேயிலைக் கழிவில் கரைக்கப்பட்ட சுண்ணாம்புக் கலைவையைத் தெளித்து சுருட்டி வைத்தால் ஓரளவு சிவப்பு கறுப்பு நிற தேயிலை தயார்!
இது ஒரு முறை! 

*பரப்பப்பட்ட கழிவில் கொண்டீஸ் என்ற பொட்டாசியம் பேர்மெங்னேட்டை (Potassium Permanganate) கரைத்து தெளித்து சுருட்டி வைப்பார்கள். 
இது மறுமுறை!

*பிறகு உலரவிட்டு கொக்கோ,இன்னும் விதவிதமான வாசனை சேர்த்தால் உயரிய ரக தேயிலை தயார். 

*அப்படி கலவை செய்யாதவை சாதாரண தேயிலை. 

*இந்த குச்சிக் கழிவிலும் ஓரளவு தூசி,அதற்கு அடுத்த தூசி...

இப்படி வகை வகையாக பிரிக்க... பெக்கோ, ஓரேஞ்ச் பெக்கோ, டஸ்ட் நம்பர் 1,2...இப்படி ரகம் ரகமாக... சூப்பர் குட் டீ தயார். 

இதில் முதலாளி மார்கள் முஸ்லிம்கள் என்றால்... கழிவுத் தேயிலை ஏக விநியோகஸ்தர்கள் சில தோட்டப்புறத் தமிழர்கள்.. 

*சேவையாளர்களும் தமிழ் ஆண் பெண் கூலித் தொழிலாளர்கள்!
*கலவை எக்ஸ்பர்ட்(நிபுணர்கள்) அதாவது டெக்னாலஜி முஸ்லிம்களுடையது.

 அதுபோக..
வவுனியாவில் உள்ள நீரில் சுண்ணாம்பு அதிகம் ஆதலால் அவர்களுக்கு கிட்னி பாதிப்பும் அதிகம் என்றாலும்...அதற்கப்பால் கிட்னி,அல்சர், கேன்சர் அதிகரிப்புக்கான #உண்மைக் #காரணம் என்னவென்பது இப்போது புரிகிறதா? 

குறிப்பு :
அங்கே உள்ள சுண்ணாம்பு நீரில் நல்ல தேயிலையும் இயற்கை  சுவையையும், மனத்தையும் தருவதில்லை, எனும்போது இந்த வகை டூப்ளிகேட் தேயிலையே கொடிகட்டிப் பறக்கிறது, என்பதும் கசப்பான உண்மை!

தகவல் 
சமூக ஆர்வலர் சச்சிதானந்தம் பழனிச்சாமி

0/Post a Comment/Comments

Previous Post Next Post