மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தடுத்து வைத்திருந்த இலங்கை மீனவர்களை விடுதலை செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவிப்பு!!

பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பிராந்தியத்திலிருந்து இலங்கை மீனர்கள்,எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீனவர்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்புவார்கள் என, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.