மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


மனோ கணேசன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!!


                                                                                       - யாழ் லக் ஷன் -
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று  அமைச்சின் காரியாலயத்தில்  இன்று இடம்பெற்றது. 

இச் சந்திப்பின் போது  நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும்  பொருளாதாரம் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த மனோகணேசன்,

அமெரிக்காவின் தூதுவர் எலைனாவுடனான சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகள்  பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய சமத்துவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அதேபோன்று அவற்றை செயற்படுத்தவதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.