புத்தர் சிலையினை உடைத்த சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்!!

மாவனல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 14 சந்தேக நபர்களையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.