மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்;வாசுதேவ நாணயக்கார!!ஐக்கிய தேசிய கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோன்றியுள்ளன. 

எனவேபிரச்சினைகளை தீவிரப்படுத்தாமல் இரண்டு தலைவர்களும் சுயமாக பதவி விலக வேண்டும். அல்லது தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவே நாணயக்கார தெரிவித்தார்.

அரசியல் வரலாற்றிலே முதல் முறையாக ஜனாதிபதி கருத்து முரண்பாடுகளை காரணம் காட்டி அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டாமல் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இந்த நிலையில், பிரதமரும் அவரது சகாக்களும் தொடர்ந்து ஜனாதிபதியுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையும்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்தே ஒரு தீர்வு காண வேண்டும். அவ்வாறு இருவரும் இணைந்து செயற்பட வேண்டும் முடியாவிடின் பதவி விலகி முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க இடமளிக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.