மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள செயலாளர் இலங்கைக்கு திடீர் விஜயம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க  திணைக்கள உதவி செயலாளர் க்ளார்க் கூப்பர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஐ எஸ் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையின் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனது இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளதாக க்ளார்க் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள க்ளார்க் கூப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உயர்மட்ட பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செய்தி
தென்னிலங்கை நிருபர்

No comments

Powered by Blogger.