மட்டு- முதலைக்குடா பிரதான வீதியினை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்!!

                                                                                                                  - மட்டு நகர் கமல்தாஸ் -
10/06/2019 திங்கட்கிழமையான இன்று முதலைக்குடா பிரதான வீதி புனரமைக்க கோரி அந்த வீதியில் முதலைக்குடா மக்கள் மற்றும் சமூக  ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


இந்த வீதியின் ஊடாக பல மக்கள் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது இந்த பிரதான சாலை ஏன் இன்னும் இழுபறியாக இருப்பதன் நோக்கம் என்ன என்பது வினாவாகவே இருக்கின்றது

பாடசாலை மாணவர்கள் கூட இதே பாதையால் தான் பாடசாலைக்கு சென்று வருகின்றார்கள்  மழை நேரங்களில் மிகவும் பாரிய அசௌகரியங்களை எதிர் கொள்கின்றார்கள் 

அரசியல்வாதிகள் சொகுசு வாகனங்கள் செல்லும் போது அவர்களுக்கு அது பெரிதாக தென்படவில்லை என்பது விளங்குகின்றது.

இந்த வீதியை வைத்து அரசியல் இலாபம் காணாது மக்களுக்கு இடையூறு வழங்காவண்ணம் பாதையினை சீரமைத்து அமைத்து தரக்கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை செய்துள்ளார்கள்.