சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்தினவிற்கு எதிராக திருகோணமலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

                                                                                             _ LOGI _
சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்தினவிற்கு எதிராக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று வியாழக்கிழமை (13) மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சுகாதார அமைச்சர் ராஜிதவின் குடியியல் உரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டியது ஏன்? என்ற தலைப்பில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட துண்டுபிரசுரமும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.