கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை – இறுதியாக வரைந்த சிறுவன்!!

வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த சிவனேசன் விதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த சிறுவன் இறுதியாக கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார்.

சிறுவனுக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு கிகிச்சைக்கான பணத்தைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகளை பலரும் மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.