மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழப்பு-டக்ளஸ் தேவானந்தா!!

                                                                                                     - யாழ் லக் ஷன் -
நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை மதிப்பீட்டு நிறுவகம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, எமது மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை இழந்தவர்களாக,அந்தக் காணி நிலங்களின் மதிப்புகளை தாரைவார்த்தவர்களாக, தங்களது கோரிக்கைகளுக்கு மதிப்பின்றிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்ததுடன் கேப்பாப்புலவு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்டெடுப்பதற்காக கடந்த 827 நாட்களாக அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும். அம் மக்களது நியாயமான கோரிக்கைக்கு இதுவரையில் எவருமே எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து உரையாற்றுகையில் கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அம் மக்களது காணி, நிலங்களை விடுவிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் முடியும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை என்றாலும் அவர்களுக்கு அதில் அக்கறையில்லை என்பதையே அவர்களது செயற்பாடுகள் எடுத்துக்காட்டி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.


 வலிகாமம் வடக்கு, சிலாவத்துறை போன்ற பகுதிகளிலும் சொந்த காணி, நில மீட்புக்காக எமது மக்கள் பரிதவித்துக் கொண்டிருப்பதாகவும் சுவீகரிக்கப்படாத நிலையில், பல ஏக்கர் காணிகள் பலந்தமாகவே கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையே இன்னமும் தொடர்வதாகவும் தெரிவித்தார்.


 மேலும் இத்தகைய காணிகள் கொழும்பு போன்ற அல்லது இன்றைய இந்த நாட்டில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பகுதிகளில் இருந்திருக்குமேயானால் அது தொடர்பில் உங்களது பார்வை நிச்சயமாக சென்றிருக்கும். ஆனால் அவை எமது பகுதிகளில் அபிவிருத்தி தொடர்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற பகுதிகளில் இருப்பதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.


மேலும் மக்களின் வாழ் நிலங்களாக மட்டுமன்றி, வாழ்வாதார நிலங்களுமாக அந்தக் காணிமற்றும் நிலங்கள் திகழ்வதாகவும் இப்படியே நீங்கள் எதையும் மதிப்பீடு செய்யாமல்இ நீங்கள் மட்டுமே அனைத்தையும் வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தால், எமது மக்கள் வேறு எங்கே போய் வாழ்வது? வாழ்வாதாரங்களைத் தேடுவது? என்று கேட்க விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.