மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


சஹ்ரானுடன் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு : ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்கிறார் அசாத் சாலி

(விஜித்தா)


"தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக சஹ்ரான் கூறியதற்கமையவே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டார்" என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார். 

உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இதனைக் குறிப்பிட்டார். 

தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்து சாட்சியமளித்த அசாத் சாலி, 

"தேசிய தௌஹித் ஜமாத்தின் தலைவர் மொஹமட் சஹ்ரான் , தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் சஹ்ரானின் பேச்சுக்களுக்கு அந்தப்பகுதி மக்கள் செவிமடுத்து வந்தனர் . 

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கினார்” .

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில் தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் முன்னர் தெரிவித்திருந்தார் .கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹ்ரான் , மக்களை அச்சுறுத்தி தனது கட்டுப்பாடட்டிற்குள் அவர்களை வைத்திருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹாரானுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தனர். தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டன .

இதேவேளை, பெட்டிக்லோ கெம்பஸ் நிறுவனத்திற்கான நிதியுதவி சவூதி அரேபியாவின் ஊடாக கிடைத்தமையை நான் அறிவேன். இப் பல்கலைக்கழகம் முழுமையான ஷரியத் கற்கை நெறியை கற்பிக்கும் பல்கலைக்கழகம் கிடையாது அப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறி மாத்திரமே முஸ்லிம்களின் பாரம்பரிய சட்டமான ஷரியா சட்டம்,  முஸ்லிம்களுக்கு அத்தியாவசியமானது.

பள்ளிவாசல்களை நிர்வகித்தல், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்டவையே ஷரியத் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .அச் சட்டத்தில் எந்தவித பிழையான விடயங்களும் கிடையாது .

அப்துல் ராசிக் என்ற நபர் கைதுசெய்யப்படாது வெளியில் நடமாடுகின்றமையானது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது .அப்துல் ராசிக் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 3 தடவைகள் கூறினேன் . ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பதிகாரியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார் அப்துல் ராசிக், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது.

2005 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பொலிஸார் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்

2017 ஆம் ஆண்டு, சஹ்ரானினால் 120 வீடுகள் காத்தான்குடியில் தீக்கிரையாக்கப்பட்டன. பாரம்பரிய முஸ்லிம் மக்களின் வீடுகள் இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டும் ஒரு பொலிஸ் கூட சென்று நடவடிக்கை எடுக்கவில்லை.

பின்னர், சஹ்ரானை கைது செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் பொலிஸார் அவரை கைது செய்யவில்லை.
கைது செய்ய முற்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை எடுத்துக்கொண்டால், 2005ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன்தான் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவேதான் வேலை செய்துள்ளன. இதனை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன். இதனால், முஸ்லிம் ஒருவருக்கு முறைப்பாடளிக்கக்கூட முடியாத நிலைமை காணப்பட்டது.
சிலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கெதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றில் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தேன். இதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
ஆடைகள் குறித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் ஊடாக முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்., இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர இந்த தெரிவுக்குழு முன்வரவேண்டும்." என்றார்.


No comments

Powered by Blogger.