மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


பெண் பிள்ளைகளின் மலசலகூடத்தில் கமராவை பொருத்திய முஸ்லிம் ஆசிரியருக்கு விளக்கமறியல்


(விஜித்தா)

தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமின் அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பாக போதனை நடத்தியதாக கூறப்படும் தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக கடமை புரிந்த முஸ்லிம் நபர் ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ரங்க திசநாயக்க நேற்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார் .

குறித்த சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் உயர்கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆவார். 

சந்தேகநபரான குறித்த ஆசிரியர் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பிப்பதை ஒருபுறம் வைத்துவிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ராரான் ஹாசிமின்  அடிப்படைவாத கொள்கைகள் தொடர்பாக போதனைகளை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் கல்வி நிலையத்தில் பெண் பிள்ளைகளுக்கான மலசலகூடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் கமெராவைப் பொருத்தி பெண் பிள்ளைகளை நிர்வாண கோலத்தில் வீடியோக்களை பதிவு செய்துள்ளார் என்றும் ஹாஷிம் அஹமட் என்ற குறித்த ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து கல்வி நிலையத்தின் உரிமையாளர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது சந்தேக நபர் உரிமையாளரை மிரட்டியதாகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேற்குறித்த காரணங்களை கருத்திற்கொண்டு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.No comments

Powered by Blogger.