கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவைத் தாக்கிய இபோலா!!

கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் தமது பெற்றோருடன் கொங்கோ எல்லை வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த நிலையிலேயே இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மரணமடைந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இபோலா தாக்கத்திற்குள்ளாகிய சிறுவன் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.