வாகரைப் பிரதேச காணி,வளங்கள் சூறையாடப்படுவதனை எதிர்த்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!!

                                                                                - வாகரை விசேட நிருபர் -
வாகரைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த காணி வளங்களை சூறையாடல் மற்றும் பறி போதல் என்பதனை பல முறை அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கவனத்துக்கு பல முறை கொண்டுவந்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் எடுத்திராத சந்தர்ப்பத்தில் அப்பிரதேச பொதுமக்கள் அமைப்புக்கள் என்பன கூட்டாக கிளர்ந்தெழுந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று புதன்கிழமை முன்னெடுந்திருந்தார்கள். 

இனியாவது தகுந்த தீர்மானங்கள் எடுக்கப்படுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.