நொண்டி நரி அம்பலம் பண்ணலாமா?! Noel Nadesan இது உண்மைக் கதை!!(சமூக ஆர்வலர் சச்சிதானந்தம் பழனிச்சாமி)

இந்தியாவில் இருந்து அந்த நாட்களில் பெருந்தோட்டத் தொழிலுக்காக வந்த இந்தியத் தமிழர்கள் அனைவரும் மன்னார்--அனுராதபுரம் வழியாகவே கால்நடையாக வந்தார்கள், என்பதை யாவரும் அறிவோம். 

இப்படி வரும் அந்தக் கூட்டம் வழிப்பறித் திருடர்கள், கைகளில் சிக்கி தங்கள் பொருட்களை இழந்துவிடுவதும் உண்டு. 

நிலைமை இப்படி இருக்க காட்டு வழியில், பாதைக்கு சற்று தூரத்தில் ஒரு கனத்த/கறுத்த சண்டியன் ஒரு மரத்தடியில் ஒரு கட்டையில் அமர்ந்திருக்க, அவனது பக்கத்தில் இரண்டு உதவியாளர்கள் நிற்பார்கள். 
அந்த சண்டியன் உட்கார்ந்த நிலையில் வழியில் போகும் ஆட்களை அதட்டி மிரட்டி தன் அடியாட்கள் ஊடாக உடைமைகளைப் பறித்து வந்தான். 
என்றாலும் எந்த நிலையிலும் அவன் எழுந்து வந்து சண்டித்தனம் காட்டுவதில்லை. 

தவிர அவன் தனது இடுப்புக்குக்குக் கீழே கால்கள்மீது ஒரு பெரிய துணியைப் போர்த்தியிருப்பான். அதனால் அவனது கால்கள் வெளியே தெரியாது.

முரண்படும் வழிப் போக்கர்களையும் "அடேய் இப்ப எழும்பி வந்தேன்னா பாரு... எலும்ப நொறுக்கிப்புடுவேன்" என்று வழிக்குக் கொண்டு வந்துவிடுவான். 

துரைமார்கள், ஏஜென்டுகள்,பெரிய கங்காணி மார்களுக்கு இது தெரியபடுத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படியே நாட்கள் உருண்டோடின.

இப்போது புதிய ஒரு கூட்டம் காட்டைக் கடக்கிறது.... வழக்கம்போல சண்டியன் ஜனங்களைப் பயமுறுத்தவே..  அந்த கூட்டத்தில் வந்த வாட்டசாட்டமான ஒரு வாலிபன் மட்டும் அவனை சட்டை செய்யாமல் போகவே சண்டியன் கோபமுற்று தனது அடியாட்களை ஏவிவிட வாலிபன் அவர்களை மொத்திவிட்டான். 

ஆனாலும் நம்ம சண்டியனோ அடியாட்களைக் காப்பாற்ற நம்ம சினிமா வில்லர்கள் போல பாய்ந்து வரவில்லை. 

எழும்பாமலும்...கட்டையில் உட்கார்ந்தவாறே "இந்தா வாரேண்டா" என்று உதார் விட... போர்த்தியிருந்த துணிக்கு உள்ளேயும்கூட கால் அசைவுகள் இல்லை. 

சந்தேகம் கொண்ட வாலிபன் சண்டியன் அருகே போய் விட்டான். சண்டியன் சத்தம் போட்டானே ஒழிய அப்போதும் எழும்பவில்லை சந்தேகம் மேலும் வலுக்கவே சண்டியனுக்கு ஓங்கி ஒரு அறை விட்டான் வீசுப்பட்டு விழுந்த சண்டியனின் கால்களைக் காணவில்லை. 

வாலிபன் மட்டுமல்ல ஏனையோரும் "நொண்டி நரி நீ அம்பலம் பண்ணுரியா" என்று மொங்கிவிட்டார்கள். 

அப்போதுதான் சண்டியனின் குட்டு வெளிப்பட்டுள்ளது.... அதாவது..அவன் பழைய பெரும் திருடன். முன்பு கால்கள் இருந்தபோது செய்த அக்கிரமத்தால் அவனுடைய கால்களை உடைத்துவிட்டார்கள்.

எனவே, காலிழந்த நிலையில் இப்போது உழைக்க இப்படியொரு குறுக்குவழி!

இது...இன்று பலருக்கும் எமது இலங்கை நாட்டின் அரசியலிலும்கூட பொருத்தமானதாக இருக்குமா?

நீதி:
எந்த விடயத்தையுமே-அது நல்லதா/கெட்டதா? என்று 
எட்ட நின்று பார்க்காமல் அருகில் போய்ப் ஆராய்ந்து பாருங்கள்!
(சமூக ஆர்வலர் திரு.சச்சிதானந்தம் பழனிச்சாமி)

0/Post a Comment/Comments

Previous Post Next Post