ரஷ்ய கடற்படை ஆய்வு நீர்மூழ்கி கப்பலில் தீப்பரவி 14பேர் உயிரிழப்பு!!

ரஷ்ய கடற்படை ஆய்வு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீயில் அதில் இருந்த 14 ஊழியர்கள் உயிரிழந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய கடற்பகுதியில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த திங்களன்று அளவீடு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது புகை நச்சாகி இந்த ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த வகையான நீர்மூழ்கிக் கப்பல் என்பது பற்றி அமைச்சு தகவல் அளிக்கவில்லை. எனினும் அது சிறப்பு நடவடிக்கைக்கான சிறு அணு நீர்மூழ்கிக் கப்பல் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தீ தற்போது அணைக்கப்பட்டு, ரஷ்ய வடக்குக் கடற்படை பிரதான தளமான செவெரொமொஸ்க்கில் நிறுத்தப்பட்டுள்ளது. நீருக்கடியில் இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவது மிக அரிதானதாகும்.

2017இல் தெற்கு அட்லாண்டிக்கில் வழக்கமான ரோந்து சென்ற ஆர்ஜன்டீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் 44 ஊழியர்களுடன் மாயமானது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post