மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்ரர்போலினால் 14 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!

சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்ரர்போலினால் சர்வதேச ரீதியில் 7030 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படியே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையை சேர்ந்த 13 பேரும் இதில் அடங்குகின்றார்கள்.

இலங்கை, இந்தியா, ரொமேனியா, கனடா ஆகிய இடங்களிலேயே குற்றங்களை புரிந்தவர்களாக இந்த இலங்கையர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் இலங்கையின் ஆங்கில பத்திரிக்கை மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்டு வரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பெயர் இந்த சிவப்பு அறிவித்தல்களுக்குள் அடங்கவில்லை என்னும் செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.