நவாலி தேவாலய படுகொலையின் 24ஆவது நினைவஞ்சலி இன்று யாழில்

(விஜித்தா)
யாழ் நவாலி சென். பீட்டர் தேவாலயத்தில் கொல்லப்பட்ட உயிர்களின் 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

இவ் 24 ஆவது நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின்  அருட்தந்தை றோய் பேடின் தலைமையில்  இடம்பெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


இடம்பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த நவாலி சென்.பீற்றர் தேவாலயத்தின் மீது 1995 ஆம் ஆண்டு யூலை மாதம் 9ஆம் திகதி  விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 380 இற்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post