மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


டுபாயிலிருந்து 32 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்களை கடத்திய இருவர் கைது!!

டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக சிகரட்டுக்களை கொண்டு வர முயற்சித்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து சனிக்கிழமை இரவு 7.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த EK 652 என்ற விமானத்திற்கூடாகவே சந்தேகநபர்கள் சிகரட்டுக்களை கடத்த முற்பட்டுள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையின் போது 32 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான 64 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 23 வயதுடைய இலங்கை பிரஜைகள் என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.