கடும் மழை காரணமாக ஜப்பானின் மூன்று நகரங்களில் இருந்து 800,000 பேர் வெளியேற்றம்!!

ஜப்பானில் கடும் மழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூன்று நகரங்களில் இருந்து சுமார் 800,000 பேர் வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளனர்.

ககோசிமா, கிரிஷ்மா மற்றும் அய்ரா நகரங்களில் இருக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடன் வெளியேறும்படி கூறப்பட்டுள்ளனர்.

மண் சரிவு ஏற்பட்டு ககோசிமாவில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அந்த நகரங்களின் மக்களுக்கு பிரதமர் ஷன்சோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை வரை அதீத கனமழை தீவிரமாக இருக்கும் என்றும், கியு உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 80 மி.மீ வரை மழை பெய்யலாம் என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post