குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 9 வயது மகள் கொலை- தந்தை தற்கொலை!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிங்கஸ்டன் சீரன் கிருபாகரன் (61). மருந்து விற்பனையாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். 

இந்நிலையில் மதுரைக்கு மகள் ஜூலியா ஸ்வீட்டி (9) உடன் வந்துள்ளார். அப்போது குளிர் பானத்தில் விஷம் கலந்து மகளை அருந்தச் செய்து, பிறகு தானும் குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இவர்களுடைய உடலை கைப்பற்றிய காவல்துறை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த குளிர்பான குப்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். 

தந்தை, மகள் மரணம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்த காவல்துறையினர், இதை சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெற்ற மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post