முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு நேற்றையதினம் யாழ். நெல்லியடி பஸ் தரிப்பிடப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள்மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், தர்மலிங்கம், சிவயோகன், சுகிர்தன், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய தலைவர் உபாலி பொன்னம்பலம், உபதலைவர் ராகவன், போசகர் செல்வரட்ணம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விச் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தார்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post