முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

                                                                                                        - முல்லை நிருபர் -
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளுள் ஒன்றாகிய செம்மலை மகாவித்தியாலயமானது அண்மையில் தனது 97ஆவது ஆண்டுநிறைவை கொண்டாடியுள்ளது. 

குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக பாடசாலையின் பழையமாணவரும் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமாகிய திரு. சி. இராஜா , அவர் தம் பாரியார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். 

குறித்த நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்வுகளும் கடந்த ஆண்டில் சிறந்த அடைவினை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

மேலும் ஆண்டு நிறைவை ஒட்டியதாக வெளியிடப்படும் உளி சஞ்சிகையும் இவ்வாண்டும் வெளியிடப்பட்டது.

1922ஆம் ஆண்டு திண்ணைப்பாடசாலையாக தொடங்கிய இப்பாடசாலையானது 1932ஆம் ஆண்டு அரச அனுமதி பெற்று சரஸ்வதி வித்தியாலயமாக தனது கல்விப்பயணத்தை தொடர்ந்தது.

1967இல் அரசினர் சிரேஸ்ட தமிழ் கலவன் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இப்பாடசாலை பின் 1981 ஆம் ஆண்டு க.பொ.த 

உயரதரம் கலைப்பிரிவுடனான மகாவித்தியாலயமாக தரம் உயர்ந்தது

2015ஆம் ஆண்டில் 1AB பாடசாலையாக தரம் உயர்ந்தது

2013ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா/த) தேர்வில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து 100%சித்தியடைந்த பாடசாலையாக வரலாறு படைத்தது. 

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வில் தோற்றிய 29 மாணவர்களும் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.

இப் பரிசளிப்பு விழாவிற்கு பல் வேறு துறைகளில் சாதித்த மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கான ஒரு தொகை பரிசில்கள் சிவம் அறக்கட்டளை ஊடாக லண்டனில் வசிக்கும் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களால் கேடயங்களும் புத்தகங்களும் "கல்விக்கு கரம் கொடுப்போம் " எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post