ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜோர்ன் ரோட்டே இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!!

                                                                                                             - இரா.ஜெகன் -
ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜோர்ன் ரோட்டே இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் தற்போது உள்ள நிலைகள் தொடர்பில் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரி சமூகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். சுமார் பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் மெற்கொண்ட அவர் தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். குறித்த தொழில்நுட்ப கல்லூரிக்கான ஒரு பகுதி உதவிகள் ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்தும், இலங்கை அரசிடமிருந்து ஒரு பகுதி உதவிகளும் கிடைத்து வந்தன. 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் மாணவர் வருகை இலங்கை அரசின் உதவி ஆகியன கிடைக்காத நிலையிலும் தொழில்நுட்ப கல்லூரியை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலை தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் அங்கு சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான வதிவிட பிரிதிநிதியின் இன்றைய வருகை முக்கியம் வாய்ந்ததாக அமையும் என நம்பப்படுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post