மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி!

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.“நெறிமுறையற்ற உடன்பாடுகளை அடுத்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்க அரசாங்கம் முற்படும் போது, கூட்டு எதிரணி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
சோபா உடன்பாடு, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு மற்றும் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு ஆகியவற்றைத் தவிர, ஒரு சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வரவும் அரசாங்கம் முயற்சிக்கும், இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.