சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தை தீர்க்கமாக புரிந்தவர் பிரபாகரன்

பிரபாகரன் பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைதொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு சபா.குகதாஸ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

இலங்கை வரலாற்றில் 1948 பின்னதான காலத்தில் குறிப்பாக1972 ஆம் ஆண்டின் பின் ஈழத்தமிழரின் உரிமை மறுப்பில் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளை அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து அவர்களின் பிடியில் இருந்து தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் பேரினவாத முதுகெலும்பு உடைக்கப்டும் போதுதான் சாத்தியப்படும் என்பதை நிதர்சனப்படுத்தி பல வெற்றிகரமான தாக்குல்கள் மூலமாக சிங்கள அரசாங்கம் பணியவைத்தால் பேச்சுவார்த்தை மேசையில் சம அந்தஸ்து கொடுத்து கலந்துரையாடியது எனவும்,

ஏனைய தமிழ் தலைவர்கள் தடம்புரண்டபோது நிதானமான ஒரு கொள்கையுடன் உறுதியாக இருந்தவர் பிரபாகரன் மட்டும் தான் அவரது அமைப்பின் பலம். சிங்கள பேரினவாத அரசாங்கத்தை பலதடவைகள் புரட்டிப் போட்டது எனவும் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய தலைவர் என சொல்லப்படுவதற்கும் அவரது செயல்திறன் காரணமாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று உலக அரங்கில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் ஐ நா வரை பேசு பொருளாக இருக்கின்றது என்றால் விடுதலைப் புலிகளின் போராட்ட தியாகம் தான். இன்று சிங்கள ஆட்சியாளர் வாய்க்கு வந்தவாறு பேசுகின்றனர் தமிழர்கள் தொடர்பில் கொள்கையற்ற விபச்சார அரசியல் வாதிகள் பேசுகின்றனர் இவ்வாறான செயல்கள் புலிகள் இயக்கம் தாயகத்தில் இயங்குநிலையில் இருந்தபோது இருக்கவில்லை இது தமிழர் தரப்பில் இறுக்கமான ஆளுமை மிக்க தலைமை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான தீர்க்க தரிசனம் நிறைந்த தலைமையை கொண்ட போராட்ட அமைப்பை முள்ளிவாய்க்கல் வரை பல நாட்டு உதவிகளுடன் அழிக்கும் போது இந்திய அரசின் கைப்பிள்ளைகளாக இருந்த கூட்டமைப்பு முக்கியத்தர்களான அன்றைய எம்பிமார் 22 பேரில் சம்பந்தர் சேனாதிராசா சுரேஸ்பிறேமச்சந்திரன் போன்றோர் SMS அணியென அழைக்கப்பட்டவர்கள் இந்திய அரசடன் இணைந்து மகிந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் தங்களது அலைபேசிகளை அணைத்து வைத்துவிட்டு மறைவாகினார்கள்இது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.


உண்மையில் தமிழர்களின் விடுதலைப்போராட்ட அழிப்பு தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்களுள் இவர்களும் உள்ளடங்குகின்றனர் இவ்வாறு இருக்க இதுவரை போராடிய போராளிகள் மாவீரர்கள் முட்டாள்கள் என்ற தோறனையில் நாங்கள் பார் அரசியல் திருத்தம் மூலம் எடுத்திடுவோம் என்று பல தவணைகளை சொல்லி கேலிக்குள்ளான பின்பு ஆயுதப்போராட்டம் தொடர்பில் சிந்திக்க வேண்டிவரும் என கூறுவது எவ்வளவு முட்டாள்தனமான விடையம் 
எனவும்,

இன்று முஸ்லிம்கள் எவ்வாறு அமைச்சுக்களை துறந்து தமது மக்களை காப்பாற்றினார்களோ அதே போன்று அன்று 22 எம்பிமாரும் புதுடில்லியில் உண்ணாநோம்பு இருந்திருந்தால் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் தமிழர்களின் விடுதலை வீச்சுப்பெற்றிருக்கும் முள்ளிவாய்க்கால்  அவலத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆகவே பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தை சரியாக அளவீடு செய்த தலைவர் என்றால் பிரபாகரன் என்பது மிகையாகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post