மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தாஜ் சமுத்திராவில் தங்கியிருந்தவர்கள் யார்? மறுநாள் காலை உணவு அருந்தியவர்கள் யார்?!!

‘உயிர்த்த தாக்குதல் தினத்தன்று முக்கிய ஹோட்டல்களில் குண்டு வெடித்தபோதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாத்திரம் ஏன் குண்டுகள் வெடிக்கவில்லை. அப்படியென்றால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார்? இது பாரிய சந்தேகமாக உள்ளது’ என நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்தார். ஸஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ. எஸ் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இருந்துள்ளன என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவிடம் இன்று (10) நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பலகை வீட்டில் இருந்த ஸஹ்ரானுக்கு எவ்வாறு இவ்வளவு கோடி பணம் கிடைத்தது?. பள்ளிவாசல் எவ்வாறு புனரமைக்கப்பட்டது. அவர்களின் தொடர்பாடலை ஆராய்ந்து பாருங்கள்.

மேலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்று சில தினங்களின் பின்னர் எனது பகுதியில் சில கடைகள் தாக்கப்பட்டன. பலர் ஒன்றுகூடி இருந்தனர். அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் ஏதோ திட்டம் தீட்டுகின்றார் என தெரிந்துகொண்டேன். நான் யாரையும் விடுவிக்கவில்லை. முன்னரேயே அவர்களை விடுவிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் மே 12 இல் குளியாப்பிட்டியவில் தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அன்றிரவு பள்ளிவாசலும் தாக்கப்பட்டது.

நான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பேசினேன். நான் தலையிடாவிடில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். அதனை தாக்க முயற்சித்தார்கள். அதன் பின்னர் நான் எனது வாகனத்தை இங்கிரிய பொலிஸ் நிலையத்திலிருந்து விடுதலையானவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்றேன். மக்கள் தாக்குதலை நடத்துவார்கள் என அச்சம் ஏற்பட்டது. நான் அன்று மதிய உணவை உண்டபோது தமது கடைகள் மீது தாக்குதல் நடத்துவதாக இருவர் கூறினர். அங்கு சென்ற போது என் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அங்கு இரு கடைகளை தீ வைப்பதிலிருந்து தடுத்தேன். இது தான் நடந்தது. கடைகளை தாக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இவ்வாறே நானும் வாக்கு மூலம் கொடுத்தேன். சிங்கள- முஸ்லிம் கலவரத்தை தடுக்க நான் முயற்சித்தேன். தாக்குதலின் 3 கிழமைக்கு பின்னர். தான் நடந்தது. முஸ்லிம் கிராமங்களை சோதனை செய்யுமாறு கோரினேன். 21 தாக்குதலின் பின்னர். சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் உறங்காத நிலை இருந்திருந்தனர். இந்த நிலை காரணமாக பொலிஸார் சோதனைகளை மேற்கொள்ளவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.