மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


தீப்பற்றிய நிலையில் வவுனியா வீடொன்றினுள் கணவன் மனைவி குற்றுயிரோடு மீட்டு!!



வவுனியா பொதுமண்டப வீதியில் உள்ள வீடொன்றில் எாிகாயங்களுடன் கணவன், மனைவி மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு இருவரும் மீட்கப்பட்டனர்.

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்த நிலையில், இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.