இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்!!

                                                                                                            - இரா.ஜெகன் - 
ஊழியர்களின் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

ஏ9 வீதியில் அமைந்துள்ள புட்சிட்டிக்கு முன்பாக இன்று (03.07.2019) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.10 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தினை மீள வழங்குக, வங்கி ஊழியர்களின் ஒய்வூதிய உரிமையினை உறுதி செய்க, ஒய்வூதியக் கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக!, ஏற்றுக் கொள்ளக்தக்கதொரு ஒய்வூதியத்தினை தருக! , ஊழியர் உணவிற்கும் தேநீருக்கும் வரி வேண்டாம் என்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்ததுடன் வரி அறவிடுவதற்கு எதிரான கோசகங்களையும் எழுப்பியிருந்தனர்.