திருக்கேதீஸ்வரத்தில் மீளவும் வளைவை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடல்.

மன்னார் திருக்கேதீச்சரத்தில் மீளவும் வளைவை நிர்மாணிப்பது தொடர்பாக இந்துக்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்றையதினம் இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் தலைமையில் நல்லூரில் உள்ள அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து சமய ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ். சின்மயா மிசன் சுவாமி சிதாசாசானந்தர், இந்துக் குருமார் தலைவர் கலாநிதி கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், மன்னார் இந்துக் குருமார் தலைவர் ம. தர்மகுமாரக் குருக்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயப் பிரதம குரு, சைவபரிபாலன சபையைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் வன்னியசிங்கம், சைவவித்தியாவிருத்திச் சங்கத் தலைவர் கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன், வலம்புரி ஆசிரியர் ந. விஜயசுந்தரம், சைவமகாசபை செயலாளர் டாக்டர் ப. நந்தகுமார், யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவர் பாலகைலாசநாத சர்மா, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர் பிருந்தாவனநாதன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
1) திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குரிய வளைவை அநாகரிகமான முறையில் பிடுங்கி அகற்றியமை தவறு என்ற கண்டனத்தை கலந்து கொண்டிருந்த யாவரும் ஒன்று கூடி வெளிப்படுத்தினர்.


02)வளைவு பழைய இடத்தில் மீள நிர்மாணிக்கப்பட வேண்டும். இதற்குத் தடையாக ஆயர் உள்ளிட்ட எவரும் இருக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.


03)திருக்கேதீஸ்வர ஆலயம் இந்திய அரச உதவியுடன் பலகோடி ரூபா பெறுமதியில் மீள நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. கோவிலைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு இந்திய அரசுக்கும் உரியது என்பதை இந்தியத் தூதர் ஊடாக இந்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post