தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை; வவுனியாவில் சம்பவம்!!

                                                                                                                           - கவியன் -
வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்றினை அறியமுடிகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

குறித்த பாடசாலையின் பல்வேறு கல்வி கல்வி சாரா நிர்வாக கடமைகளை வினைத்திறனுடன் நிறைவேற்றிய குறிப்பிட்ட ஆசிரியை அதிபரின் அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் பாடசாலையினுடைய ஆசிரியர்களின் கடமைகளின் பகிர்வின்மையே இதற்கான காராணம் என பாடசாலையின் சக ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தூர பிரதேசங்களிலிருந்து பாடசாலைகளுக்கு சென்று வினைத்திறனுடன் சேவையாற்றும் ஆசிரியர்கள் இவ்வாறான பாதிப்புக்களுக்கு முகம்கொடுப்பது மாணவர்களின் கல்வியை பாதிப்பதோடு ஆசிரியர்கள் மத்தியிலும் விரக்தி நிலமையை உருவாக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.