மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட்ட உயர்தர வித்தியாலயத்தின்; வித்துவம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

                                                                                                             - விசேட நிருபர் -
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் வித்துவம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும் இன்று காலை இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் கோ. குலேந்திரகுமார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி, விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கான பரிசில்கள் பிரதம விருந்தினர்களால் வழங்கப்பட்டதுடன் பாடசாலை ஆசிரியர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

மேலும் எண்பது ஆண்டு கால வரலாற்றை கொண்ட இப்பாடசாலையின் முதலாவது சஞ்சிகையான வித்துவம் சஞ்சிகையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா இதன்போது வெளியிட்டு வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா, வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments

Powered by Blogger.