மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


கடந்த அரசை விட இந்த அரசு கொஞ்சம் பரவாயில்லை- சம்பந்தன்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள்,

'இந்த அரசு கடந்த அரசைவிடக் கொஞ்சம் பரவாயில்லை.கடந்த ஆட்சியின்போது இருந்ததைவிட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை எனவும் இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம் என தெரிவித்தார்.

எனவே நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி இன்று திருகோணமலையில் என் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது எனவும்,

எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை.அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.