மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


யாழ் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டதுடன் வீட்டில் காணப்பட்ட பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பித்துள்ளது.

குறித்த வன்முறைச் சம்பவமானது நேற்று நள்ளிரவு வேளை நடைபெற்றதுடன் 3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.