ரயில் கடவை காப்பாளர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!!

                                                                                        - வவுனியா விசேட நிருபர் -
வடக்கு கிழக்கை சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் நேற்று (11) காலை 10.30மணியளவில் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை ரயில்வே திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ரயில் கடவை காப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் 250 ரூபா சம்பளத்தினை உயர்த்து, பொலிஸாரிடம் இருந்து எம்மை மீட்க வேண்டும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?, எம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இவ் ஆர்ப்பாட்டம் ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post