நாவலப்பிட்டிவ் ஹபுகஸ்தலாவ பகுதியில் விபத்துச் சம்பவம்

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டி விபத்தின் போது அதிலிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் எட்டு பேரும் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் அபுகஸ்தலாவை முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஐவரும் 7ம், 8ம் வகுப்புக்களைச் சேர்ந்த மூவரும் உள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post