சிலாபம் ஆனமடுவ பகுதியில் வானும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவரின் நிலை கவலைக்கிடம்!!

                                                                                                                - இரா.ஜெகன் -
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சோ்ந்த 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

சிலாபம்- ஆனமடுவ வீதியில் பள்ளம் சேருகெலே பகுதியில் வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஐவருள் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென்றும் கனடாவிலிருந்து வருகைத் தந்த தமது உறவினரொருவரை வரவேற்பதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post