செந்தூரன் அரைச்சதம்: போராடி தோற்றது விக்ரோறியன்ஸ்சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் கஜேந்திரன் தலைமையில் இரண்டாவது ஒருநாள் போட்டியினை AB விளையாட்டுக் கழகத்துடன் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற AB  விளையாட்டுக் கழக அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 46.1 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 242/10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

AB விளையாட்டுக் கழக அணி சார்பாக
ராகுலன் 73 ஓட்டங்களையும், உத்தமன் 59 ஓட்டங்களையும், கஜி 29 ஓட்டங்களையும், ஜனா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில்
விஜயகுமார் 3, கிருஷாந் 2, பிரதீஸ் 2,செந்தூரன் 1, பிரஷாந் 1, தூயவன் 1, இலக்குகளை வீழ்த்தினார்கள்.

243 என்ற வெற்றி இலக்கை கொண்டு கழகம் இறங்கிய சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் 49.1 ஓவர்களில் 236/10 ஓட்டங்களை பெற்று போராடி தோற்றது

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடி செந்தூரன் 66 ஓட்டங்களையும்,
பிரதீஸ் 42 ஓட்டங்களையும், குகஷாந்தன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், இன்பராஜ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர் .

பந்துவீச்சில் யதுலன் 3, லிங்கம் 2, டிலு 2, விக்கெட்டுகளையும் கனா , உத்தமன் ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை கைபற்றினார்

இந்த போட்டியின் மூலம் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியினை விறுவிறுப்புடன் இலக்கை நோக்கி சென்ற போதும் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது

0/Post a Comment/Comments

Previous Post Next Post