மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை -கல்முனையில் சம்பவம்

நோய் தாக்கத்தின் காரணமாக முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று(7) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்னால் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த புஞ்சி அப்பு கந்தசாமி(வயது-65) என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.