மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சிறை தண்டனை விதிக்கப்பட்டது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை; சீமான் கண்டனம்

2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் நேற்றையதினம் தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ10,000 அபராதம் விதித்தார். மேலும் வைகோவுக்கான தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் வைகோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில்,

தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்துஇ கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'நான் குற்றஞ்சாட்டுகிறேன்' எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது எனவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது அண்ணன் வைகோ குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.