மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!!

இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆணைக்குழுவை நியமித்தார். 

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் மோசடி முறைகேடுகளை கண்டறிவதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு மாத காலப்பகுதியில் அறிக்கையொன்றையும் வழங்க வேண்டுமென ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உப்பாலி அபயரத்னவின் தலைமையில் இந்த ஆணைக்கு நியமிக்கப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.