மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


குருநாகல் வைத்தியர் ஷாபியை விடுவிக்க பணிப்பு!!

குருநாகல் வைத்தியர் ஷாபியை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் வைத்திருப்பது முறையல்ல என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வைத்தியர் மீது பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்ட எந்தவொரு குற்றசாட்டுக்களும் இல்லாத நிலையில், அவரை முறையற்ற நிலையில் அந்தச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குருநாகலைச் சேர்ந்த வைத்தியர் ஷாபி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மே 27 ஆம் திகதி முதல் 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த வைத்தியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அவர் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் இல்லை எனத் தெரிவித்து அவரை விடுவிப்பதே உகந்தது என பாதுகாப்பு அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.