மக்களை பாதுகாக்கவே கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி விஜயம் செய்கிறோம்- அனந்தி

கல்முனையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தில் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் அவர்கள்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் எனவும்  தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது  எனவும் எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக  இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம்  கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி  விஜயம் செய்வதாகவும் கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது, நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே தவிர வாக்குகளை சிதைப்பதற்காகவல்ல.நாங்கள் வடக்கிலே ஸ்திரமான நிலையில் எமது கட்சி காலூன்றாத நிலையில் கிழக்கில் அரசியல் செய்வது நமது நோக்கமல்ல எனவும்

கூட்டமைப்பின் தலைமை உள்ள கிழக்கு மாகாணத்தில் பல இடங்கள் பறிபோயுள்ளது இவற்றைக் கூட கூட்டமைப்பு சரிவர செய்யவில்லை இதன் நிமித்தமே நாங்கள்  வடக்கு கிழக்கு என்ற பாராமல் தமிழர்கள் என்ற நோக்கிலே குரல் கொடுப்பதற்காக வருகின்றோம்.கிழக்கில் உள்ள மக்கள் தங்களுக்கான சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் நாங்கள் ஒரு போதும் வடக்கிலிருந்து வந்து கிழக்கிலே தேர்தலில் இறங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் கூட பலவற்றை இழந்து இருக்கிறார்கள் வடக்கில் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை கிழக்கு மக்கள் அனுபவித்து வருகிறார்கள் . எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக  இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. யாருக்கும் அஞ்சி வடக்கு வேறு  கிழக்கு வேறு என வேறுபடுத்த தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.