கலகெடிஹேன வேன் சாரதி மீது தாக்குதல்: நால்வர் சீ.ஐ.டியில் சரண்

கொழும்பு -கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் வேன் சாரதி ஒருவரை, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாவலரின் ஆடையை ஒத்த ஆடை அணிந்து வந்தவர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று (20) மாலைவரை நான்கு பேர் வரையில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த டபள்யூ. பீ சீ.ஏ.டீ.8850 என்ற இலக்க தகட்டை கொண்ட டிபெண்டர் வாகனம் வெள்ளிக்கிழமை இரவு மஹரகம – அல்ஹேன பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது டிபெண்டர் வாகனத்தில் பயணித்ததாக கூறி தல்கஸ்தோல பகுதியை சேர்ந்த 44 வயதான வெதிசிங்க ஆராச்சிகே சந்துன் புஷ்பகுமார என்பவரும் களுத்தறை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மாகஸ் பீட்டர் றுவன் பிரசன்ன என்பவரும் இன்று காலை 11.15 மணியளவில் சீ.ஐ.டியில் சரணடைந்துள்னர்.

மேலும் , நேற்று (19) இரவு டிபெண்டர் வாகன சாரதியான ஜம்புகஸ்வத்த , சிறிகதுவபாதை , பதுகம , மதுகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஹேவகே காமினி விஜேசூரிய என்பவரும் திவுல்கமன, அரலகங்வில ,பொலன்னறுவ பகுதியை சேர்ந்த 32 வயதான விதான ஆராச்சிலாகே கீத் பிரசன்ன பண்டார என்பவரும் மற்றும் ஒருவரும் சரணடைந்திருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post